உத்திரபிரதேசம் மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது, மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகிறது.
உத்திரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14 ஆம் தேதியன்று நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உடல் முழுக்க காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் அலிகாரில் உள்ள ஜே என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இப்பெண்ணின் மரணத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றன.
உத்திரபிரதேச போலீஸ் அந்த பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் தான் இறந்த உடலை எரித்தோ ம் எனக் கூறினாலும் போலீஸின் அராஜகத்தை வெளிக்காட்டும் விதமாக விடீயோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அம்மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அம்மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே காங்கிரஸ் காட்சியின் சார்பில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த மாநிலத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.