மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் கீழே தள்ளப்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நந்திகிராமம் :
தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் சுவந்த் அதிகாரிக்கு எதிராக நந்திகிராமத்தில் போட்டியிடும் மம்தா பானர்ஜி நேற்று மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து பிருலியா என்ற இடத்தில் மம்தா கோவிலில் சாமி தரிசம் செய்து விட்டு வெளிய அவரது கார் அருகே நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட குழு காரின் முன்பக்க கதவை அடைத்ததில் மம்தாவின் காலில் பலமாக தாக்கியது.
அதன்பிறகு ,சுதாரித்துக்கொண்ட மம்தா வேகமாக காரின் உள்ளே செல்ல முயற்சி செய்தபோது அந்த மர்ம கும்பல் அவரை வேகமாக கீழே தள்ளியது. இதனால் மம்தாவின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது மம்தா கொல்கத்தா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளனர்.
Read more – இன்றைய ராசிபலன் 11.03.2021!!!
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தாங்கர் நேரில் சென்று மம்தாவை விசாரித்து, இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மம்தாவிற்கு இடது கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பரப்புரையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.