பாலியல் புகாரில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் கோடரியால் பெண்ணை கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா :
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொர்லகுண்டா என்ற பகுதியில் விமலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதே பகுதியில் வசித்து வருபவர் ராகுல் தோட் என்பவர் விமலாவிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனிடையே ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்த விமலா, இந்த நபர் குறித்து தன் குடும்பத்திற்கும், காவல் துறையினருக்கும் தெரியப்படுத்தி ராகுல் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து நிர்பயா சட்டத்தின் கீழ் ராகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமலா தன்னை சிறைக்கு அனுப்பிய கோபத்தில் இருந்த ராகுல், ஜாமீனில் வெளியே வந்து கோடாரியுடன் விமலா வீட்டிற்கு சென்று வெளியில் இருந்த அவரை கோடாரியால் கொடூரமாய் தாக்கி தப்பியோடியுள்ளார்.
Read more – ‘கொரோனா’ன்னா என்னங்கய்யா ? 11 மாத கோமா சிகிச்சைக்கு பிறகு கேட்ட இளைஞன்.. அதிர்ந்த மருத்துவர்கள்
இதையடுத்து ராகுல் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.