நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 8000
பணி:
Post Graduate Teacher (PGT), Trained Graduate Teacher (TGT), Primary Teacher (PRT)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.10.2020
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு மற்றும் பாடம் எடுக்கும் முறை மற்றும் கணினி குறித்த அறிவு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வயது வரம்பு : 5 ஆண்டிற்குள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு 40 வயதாகவும், 5 ஆண்டிற்குள் மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு 57 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : முதுகலை / இளங்கலை B. Ed பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aps-csb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!