சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர் மாநகர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு பிரிவு சார்பில் தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலுள்ள துணை நீதிமன்றங்களில் நகர் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மொத்தப்பணியிடங்கள்:1,412
கல்வித்தகுதி: 8ம்வகுப்பு & 10ம் வகுப்பு தேர்ச்சி
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2022.
மேலும் விவரங்களுக்கு https://mhc.tn.gov.in/recruitment/login சென்று தெரிந்து கொள்ளவும்.
-பா.ஈ.பரசுராமன்.




