இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள 98,000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தபால்காரர்கள், மெயில்கார்டு, பல்வகைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தபால்காரர் பதவிகளில் 58099 இடங்களும், மெயில் கார்டு பதவிகளில் 1445 பணியிடங்களும், பல்வகை பணியாளர்கள் பதவிகளில் 37539 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் தபால்காரர் பணிகளில் 6110 பேரும், பல்வகை பணியாளர் பணிகளில் 3316 பேரும், மெயில்கார்டு பதவிகளில் 128 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி, கணினி அறிவு.
தேர்வுப்பாடம், விண்ணப்பக்கட்டணம், தெரிவுமுறை, வயதுவரம்பு, விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படும் தேதி ஆகிய விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx சென்று விண்ணப்பிக்க வேண்டும்.




