எலக்ட்ரீசியன், வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் (CCI) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.10.2020 ஆகும்.
மொத்தப் பணியிடங்கள் : 20
நிறுவனம் : சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( Cement Corporation of India Limited – (CCI) )
பதவி மற்றும் காலியிடங்கள்:
- எலெக்ட்ரீசியன் (Electrician) – 05
- வெல்டர் (Welder) – 03
- ஃபிட்டர் (Fitter) – 04
- மைனிங்க் (Mining) – 02
- ஃப்ரொடெக்ஷன் (Production) – 06
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cciltd. in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மேற்கூறிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 30.09.2020-ன் படி 27-க்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2020
தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.cciltd.in/UserFiles/files/ad%20AT022020%20bokajan%20signed%20advert.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!