தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், வறட்சி கண்காணிப்பு மையத்தில் வேளாண் நிபுணர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
வயது வரம்பு:
14.08.2020-ன் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 55 முதல் 65 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய tnsdma.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
கல்வித்தகுதி :
வேளாண் மண் அறிவியல், வேளாண் துறையில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ .7.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். recruitment.tndrra.@gmail.com