Mi பேண்ட் 6 அறிமுகமாகியுள்ளது.

சியோமி நிறுவனம் அதன் புதிய தலைமுறை Mi பிட்னஸ் பேண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அது மி பேண்ட் 6 என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய பிட்னஸ் பேண்ட் புல் ஸ்க்ரீன் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வருவதாகக் கூறப்படுகிறது, இது பயனர்களுக்கு 50 சதவீதம் அதிகமான காட்சி அனுபவத்தை வழங்கும், அதற்கு ஏதுவாக இதன் டிஸ்பிளே வட்டமான மூலைகளை கொண்டுள்ளது. சியோமி நிறுவனம் எப்போது மி பேண்ட் 6-ஐ இந்தியாவுக்குக் கொண்டு வரும் என்பதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சியோமி இரண்டு வகைகளில் மி பேண்ட் 6-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்டின் வெண்ணிலா வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.2,500 ஆகும். மறுகையில் உள்ள என்எப்சி ஆதரவுடன் வரும் மி பேண்ட் 6-இன் ஸ்பெஷல் எடிஷன் சுமார் ரூ.3,000 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இந்த பேண்ட் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.
புதிய மி பேண்ட் 6 ஆனது 1.56 இன்ச் (152 x 486 பிக்சல்கள்) AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது Mi Band 5-இன் 1.1 இன்ச் AMOLED டச் ஸ்க்ரீனை விட பெரியது. புதிய ஃபிட்னெஸ் பேண்ட் 326ppi பிக்சல் அடர்த்தி, 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 50 மீட்டர் வரை நீர்ப்புகாத டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஃபிட்னஸ் பேண்ட் 125 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது, இது 14 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேண்ட் முழுமையாக சார்ஜ் ஆக சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.
இது ப்ளூடூத் 5.0 ஐ ஆதரிக்கிறது. மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, மி பேண்ட் 6 ஆனது 30 விளையாட்டு மாடல்களுடன் வருகிறது, அதில் நடைபயிற்சி, ஓட்டம், உட்புற டிரெட்மில் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட ஆறு செயல்பாடுகளை பேண்ட் தானாகவே கண்டறியும். பேண்ட் 24/7 இரத்த அழுத்தம், இரத்த ஆக்ஸிஜன் (SPO2) மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு போன்ற திறன்களையும் கொண்டுள்ளது. மேலும், இது தூக்க கண்காணிப்பையும் ஆதரிக்கிறது.




