இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, உளவுத்துறை (IB) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 12
நிர்வாகம் : உளவுத்துறை (Intelligence Bureau – (IB))
பதவி மற்றும் காலியிடங்கள்:
- இன்ஸ்பெக்டர் (கால்நடை) (Inspector (Veterinary)) – 02
- சப் இன்ஸ்பெக்டர் (கால்நடை) (Sub Inspector (Veterinary)) – 07
- இன்ஸ்பெக்டர் (இந்தி மொழிபெயர்ப்பாளர்) (Inspector (Junior Hindi Translator)) – 03
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 52 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் / ஆளுமைத்திறன் சோதனை
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/file/d/1d5cyQ0z2mPTH6v-ArNdRw62_o8cQIxjW/view என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Commandant (Pers-II), Directorate General, Sashastra Seema Bal, East Block-V, R.K. Puram, Sector-I, New Delhi – 11006.
கல்வித் தகுதி :
- இன்ஸ்பெக்டர் (கால்நடை) – அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் முக்கிய பாடமாக உயிரியலுடன் அறிவியல் தேர்வில் (10 மற்றும் 12வகுப்பு) தேர்ச்சி.
- சப் இன்ஸ்பெக்டர் (கால்நடை) – குறைவான அல்லது ஊதியம் தகுதி அடிப்படையில் இதற்கு சமமான படிப்பில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இன்ஸ்பெக்டர் (இந்தி மொழிபெயர்ப்பாளர்) – முதுகலை பட்டப்படிப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் படித்திருக்க வேண்டும். 6 பாடங்கள் கட்டாயம் இது தொடர்பானதாக இருக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://drive.google.com/file/d/1kXa-JoNEcHwrPmZh34fhwLNTz-zbmx8P/view என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!