பிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்காக அவர் போட்டோ ஷீட் கொடுத்துள்ளார். அதில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், இதுபோன்ற படங்களால்தான் இளைஞர்கள் கெட்டு போகின்றனர். இதைத்தான் ரன்வீர் செய்கிறார். அவர் பாலிவுட்டை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது என திட்டி தீர்க்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரங்கணக்கான மக்கள் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், மக்கள் சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
இந்த நிலையில், ரன்வீரின் புகைப்படங்களுக்கு தீபிகா படுகோனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என நெட்டிசன்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.




