குடியரசுத்தலைவர் தேர்தலில் யஷ்வந்த சின்ஹா தோல்வியடைந்ததை அடுத்து அவரை கலாய்க்கும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்க தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் 64% வாக்குகளை பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36% வாக்குகள் கிடைத்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெறுவார் என்று தெரிந்தும் எதிர்கட்சியினர் யஷ்வந்த் சின்ஹாவை பலிகடா ஆக்கியுள்ளனர் என்பதை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, மகாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனா கட்சியின் தலைவர் ‘உத்தவ் தாக்கரே’ தோற்கடிக்கப்பட்டதை குறிப்பிடும் விதமாக பதிவிடப்பட்ட வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.