சென்னை கொளத்தூர் தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் 4 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு பணி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பின்னர் கொளத்தூர் பள்ளி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் கட்டும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தீட்டித் தோட்டம் பகுதியில் ஒரு கோடியே 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைத்து மாணவி ஒருவருடன் இறகுப்பந்து விளையாடினார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
தீட்டித் தோட்டம் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 33 பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.