நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ,செப்டம்பர் 15ம் தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லி :நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு உச்ச நீதிமன்றம் 1 ரூபாய் அபராதம் விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.இந்த 1 ரூபாயை வருகின்ற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 3 மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிசன் கடந்த ஜூன் மாதம் தனது பைக்கில் அமர்ந்தவாறு புகைப்படம் ஒன்றை எடுத்து இருந்தார்.இந்த குறித்து பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் முகக்கவசம்,ஹெல்மெட் இல்லாமல் அமர்த்த தலைமை நீதிபதி என்றும் கடந்த 6 ஆண்டுகளாக நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்ச்சித்துள்ளார்.இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி பிரசாந்த் பூஷன் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது ,இந்த வழக்கில் பூஷன் கடந்த 14 ம் தேதி குற்றவாளி எனவும் தீர்ப்பளித்தது.இதனை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க நீதிபதிகள்3 நாட்கள் அவகாசம் அளித்தனர்..
அதைத்தொடர்ந்து 24ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பூஷன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று மறுத்துவிட்டார்..இதனால் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்தும் அதனை செப்டம்பர் 15ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும்,அதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியாற்றவும் தடைவிதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.