சூரியனைக் காணவில்லை ஆனால் ஒளி மட்டும் சிறிதளவு இருந்தது.ஆழ்கடல் என்பதால் அலையின் இசை அதிகளவு இல்லை.அந்த மங்கிய ஒளியில் திசைகளை கண்களால் காண முடியவில்லை மதிய ஒளியிலும் அதே நிலைமைதான்.ஏனென்றால் அந்த தெற்கு இந்தியப் பெருங்கடல் அனைத்தையும் தன்னுள் மறைத்திருந்தது.மெல்ல நிலவு கடலை எட்டிப்பார்த்தது.அந்த இருண்ட கடலுக்குள் வெள்ளை காகித துண்டைப்போல சிறிய சொகுசு கப்பல் மட்டும் ஊர்ந்துக் கொண்டிருந்தது.ஒரு சிறிய அறை அதனுள் சோசப் அசோக் அரைத் தூக்கத்தில் புரண்டு கொண்டு இருந்தான். படுக்கையின் ஓரத்தில் சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி நாவல் இருந்தது. அசோக்கின் முகத்தில் சிறிய பொன்சிரிப்பு ஏதோ நல்ல கனவு போல தோன்ருகிறது.
கொல்லி மலையில் இருக்கும் ஏதோவொரு அருவியின் அருகில் அசோக் காட்டுக்கோழியை வெட்டிக் கொண்டிருந்தான். நீரோடையின் அருகில் மட்டமான கல்லில் ரபீக்கும் அவன் மகள் ஹாஜிராவும் பட்டை கிராம்பு கசகசா இஞ்சி பூண்டு அரைத்து கொண்டிருந்தனர். ஹாஜிராக்கு 12 வயது அவள் தாய் பார்த்திமா 2 வருடம் முன்பு விபத்தில் இறந்தார். டேய் ரபிக் கொஞ்சம் மஞ்சள் போட்டு அறடா. மாமா அறைக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏய் பேட்டி அரைக்கர வலி சுவைக்கரப்போ தெரியாது. வேகமா அரை மெதுவா சாப்பிடு. அருவியின் சாரல் காற்றோடு கலந்து கொண்டிருந்தது. அந்த காற்று மரங்களின் மீது பட மரம் வெக்கத்தில் வேண்டாம் வேண்டாம் என தன் தழைகளை அசைக்க அதன் தழைகளில் இருந்து காதல் நீர்கள் தரையில் படர்ந்த புற்களின் மீது பட புற்கள் வெட்கத்தில் தழை குனிந்தது. ஹாஜிரா அடுப்பின் மேல் உள்ள பாத்திரத்தின் உள்ளே எண்ணெய் ஊற்றினாள். அசோக் மசாலாவையும் கறியையும் போட்டு தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை போட்டு பாத்திரத்தை மூடினான். டேய் ரபீக் அடுத்த வாரம் ஒரு பிளான். என்ன மாமா. நடு கடலுக்கு போகப்போறேன் பேட்டி. மாமா நானும் வரட்டுமா. ஹாஜிரா வேணாம் மாமா மட்டும் போகட்டும். மாமா மாமா ……….. . ஓகே ஓகே நாம எல்லாரும் போறோம். டேய் அசோக் செலவு ? அத சிங் பாத்துக்குவாரு அவருக்கு அங்க போகனும்னு ஆச நா அவருக்கு துணை. மாமா மணம் மணக்குது. ஆமா மணக்கும் மனம் இருந்தால் கவலையும் இல்ல பிரச்சனையும் இல்ல. ரபீக் மூடியை திறந்தான். சாரலை தூக்கிச் சென்ற காற்று நின்றது மரம் வெட்கத்தை மறந்து சிலை போல் நின்றது. புற்களும் அசையவில்லை பற்கள் மட்டுமே அசைந்தன. கூடவே கப்பலும் அசைந்தன.
சிவப்பு விளக்கும் அலாரமும் மாறி மாறி அலரியது. சிப்ல படா பிரச்சனை படா சைசு பிஷ் இல்ல பாற கார்ட்ஸ் எமர்ஜென்சி போட்ட ரெடி பண்ணுங்க ஸ்பீடு கோ கோ கோ …….. டேய் அசோக் ? மாமா என்ன ஆச்சு மாமா ? ஒண்ணும் இல்ல மா ஒண்ணும் இல்ல . ரபீக் பேட்டிய கூட்டீட்டு சேப்டி ப்ளேசுக்கு போ . நீடா ? நா வரேன் நீ போ . அசோக் வேகமாக கேப்டன் அறையை நோக்கி ஓடினான். காற்றும் அலையும் கப்பலை பொம்மை போல பாடு படுத்தின. அலைகள் கப்பலை மாறி மாறி அடித்தது. கப்பல் கேப்டனின் திறமையால் தாக்குபிடிக்கிறது. அசோக் சிப் ரொம்ப டென்ஜர் கோ எமர்ஜன்சி போட் ரெடி பஸ்ட் உயிர காப்பாத்து கோ கோ என சொல்லிக்கொண்டு சிங் அறையை நோக்கி ஓடினான். அசோக் கடலை பார்த்தான். கருகருவென பயங்கரமாக இருந்தது. அழகின் வேறு முகம் அவன் கண்முன் தெரிந்தது.
கடற்கரை, மணல், பட்டாணி சுண்டல், கடல் அலை என கடல் முன் வாழும் மக்களுக்கு கடல் மீது வாழும் கஷ்டம் தெரியாது. மீன் உண்பவனுக்கு மீனவன் கஷ்டம் தெரியாது. இப்படி கடலை அவன் பார்த்தது இல்லை. மாமா சீக்கரம் வாங்க. அசோக் வேகமாக ஓடிச்சென்று என்ஹின் இல்லாத அந்த எமர்ஜன்சி படகில் ஏறி பாதுகாப்பு உடையை அணிந்தார்கள். ஹாஜிரா வானத்தை பார்த்தாள் நிலவு மிகவும் பிரகாசமாக தெரிந்தது. அப்போது கருப்பு உருவம் நிலவை மறைத்தது. அல்லா……. ஜீசஸ்…… முருகா …. அம்மா …….. அப்பா…….. என பல பேரொளிகள். அந்த கருப்பு உருவம் அவர்கள் மேல் பாய்ந்தது. அலை மீண்டும் மீண்டும் பாய்ந்தது. சில நேரம் கதறல்கள் கேட்டன பின்பு அலையின் கதறல் மட்டுமே பலமாக கேட்டன.
நரன்கள் பலர் என்னை வதைக்க
நானோ சிலைபோல் எப்படி பொருக்க
நானே ஒருவன் எதிர்த்து அடிக்க
நீயோ பலரோ உயிர் பறக்க
மீண்டும் சிலஉயிர் என்னுள் பிறக்க
நானே இயற்கை நானே கொற்கை என கடல் கவிதைகளை வாரி வழங்கிவிட்டு மீண்டும் சிலை போல் பொருமையானது. சூரியன் மீண்டும் கிழக்கு திசையை கண்டு பிடித்துவிட்டது. ஹாஜிராவும் அசோக்கும் தீவு போல காட்சியளித்த சிறிய பகுதியின் கரையோரத்தில் அரைமயக்கத்தில் கிடந்தனர். ஹாஜிரா மெல்ல எழுந்தாள் தன் பார்வையை மறைத்த முடிகளை ஒதுக்கினாள். மெல்ல கடலை உற்று பார்த்தாள் சூரிய ஒளியில் அழகான கடல் அவளுக்கு அழகாக தெரியவில்லை பயத்தால் முகத்தை திருப்பினாள். அசோக் மங்கலாக மணலை பார்த்தான் விருக்கென்று வேகமாக எழுந்தான். ரபீக் ! ரபீக் ! என கத்திக்கொண்டு கரை ஓரமாக ஓடினான். ஹாஜிராவும் அழுதுக்கொண்டே அசோக் பின்னால் ஓடினாள். பின்பு இருவரும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றனர். இருவரும் மணலில் அமர்ந்தனர். இருவரின் வாய்களும் துடித்தது ஆனால் பேசவோ அழுகவோ மனதில் வார்த்தை இல்லை கண்களில் மட்டுமே வார்த்தை இருந்தது அது நீராய் வடிந்தது. சூரியன் அவர்களை பார்த்துக்கொண்டே செங்குத்தாக நின்றான். மாமா ரொம்ப பயமாக இருக்கு மாமா ! அப்பாவ காணோம் என்ன செய்ய அல்லா…. அசோக் அழுதுக்கொண்டே அவள் தலையை தடவினான். பேட்டி அழாத நாம போகலாம் என மெல்ல எழுந்து அவளையும் தூக்கினான். கடலை உற்று பார்த்தான் அது அமைதியாக இருந்தது. இந்த சிறிய தீவைச்சுற்றியுள்ள பெரிய நீர்தீவு போல காட்சியளித்தது. அந்த நீர்தீவில் எமர்ஜென்சி போட் ஒன்று அலையின் போக்கிற்கு வந்தது. அது முன்னும் பின்னும் என அலையுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அவர்கள் அந்த படகிற்காக கரையில் காத்து இருந்தனர். பெரிய அலை படகை கரையோரமாக தள்ளி விளையாட்டை முடித்துக் கொண்டது.
அவர்கள் வேகமாக ஓடி படகிற்குள் பார்த்தனர். அதன் உள்ளே ஒரு துடுப்பு, எமர்ஜென்சி டியூப், ஆறு ரொட்டி பாக்கெட் மற்றும் கொஞ்சம் நல்ல தண்ணி மட்டும் இருந்தது. அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு உடையை கழற்றி படகின் உள்ளே போட்டுவிட்டு ஹாஜிராவை உள்ளே ஏற்றி விட்டு அசோக் படகை சிறிது தூரம் தள்ளி அவனும் அதில் ஏறினான். எதற்கு தீவில் இருந்து படகில் ஏறி செல்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் இதற்கு விடை அவர்களுக்கு தெரியாது! ஆனால் இங்கிருந்து செல்ல வேண்டும். எங்கு? தெரியாது. படகு தூரமாக செல்கிறது. சூரியன் அவர்களை பார்த்துக் கொண்டே எதிர் திசையில் மறைந்தது. நட்சத்திர பட்டாளம் வானம் இருப்பதை காட்டின. நிலவு பெருமையுடன் தானும் இருப்பதை காட்டியது. போட்டிக்கு கடலில் சில உயிரினமும் மின்னின. படகு கடலின் போக்கிற்கு செல்கிறது.
அசோக்கும் ஹாஜிராவும் எதிர்எதிரே அமர்ந்திருந்தனர். அவள் கண்கள் விரிந்து இருந்தது.அவளின் உதடு துடித்தது அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைக்காக அவனின் இதயம் வேகமாக துடித்தது. கடலின் மௌனத்தில் நன்றாக கேட்டது. மாமா அப்பா இல்லாம நா என்ன பண்றது. எப்படி படிக்கிறது? எப்படி வாழ்றது? பேட்டி நா உன்ன பாத்துகிறேன் என சொல்ல வாய் துடித்தது. நா ஒரு சாதாரண பொண்ணு மாமா என அவள் கூற அவன் மனதில் அது இடியாய் விழுந்தது. அவன் கண்ணின் நீர்துளி படகின் உள்ளேயும் படகை ஈரமாக்கின.
எதற்கு அவளின் இந்த வார்த்தைக்காக அவன் கண்ணீர் சிந்துகிறான். அவள் வார்த்தை சரிதானே பெண்கள் சாதாரணமானர்கள் தானே. ஆனால் இது அவனுக்கு கேட்க கூடாத வார்த்தை இதை அவள் சொன்னதை அவனாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவன் பெருவலியில் ஜஹனாராவின் வலியையும் கடலுக்கு அப்பாலில் மரகதம் அவளின் சிறையையும் தேவதாசிகளின் வாழ்க்கையும் முலைவரி போராட்டமும் அவனை செதுக்கி இருந்தது. அதனால்தான் அவளையும் அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்றான் சுதந்திரமாக. ஆனால் அவள் மனதில் சுதந்திரம் பிறக்கவில்லை என்பதை அவன் உணர்ந்தான். பேட்டி பெண் சுதந்திரம் எப்போது கிடைக்கும் ? அவன் அவள் பதிலுக்காக அவள் உதடை பார்த்து கொண்டிருந்தான். நமக்கு புடித்த உடையை அணியும் போது மாமா என அவள் அழுத்தமாக கூறினாள். பெண் சுதந்திரத்தை பற்றியோ தனிமனித சுதந்திரத்தை பற்றியோ பள்ளிகளில் சொல்லி தருவதில்லை. சமுதாயமும் சொல்லி தருவதில்லை அப்படி என்றால் அங்கு என்ன கற்பிக்கப்படுகிறது. அவள் இஸ்லாம் பெண் என்பதால் உடை சுதந்திரத்தை பற்றி பேசுகிறாள். அவளை பார்த்தான் அவள் உடலை குறுக்கி சுதந்திரம் அற்று தூங்கினாள். தான் கடலில் இருந்து எப்படி தப்பிப்பது என அவன் யோசித்தான். ஏதோவொரு கப்பல் வந்தால் தப்பிக்கலாம் ஆனால் இங்கு கப்பல்களும் வராது, ஹாஜிரா வேகமாக எழுந்தாள். பேட்டி என்னாச்சு? என்னாச்சு? அவள் கண்கள் கடலில் எதையோ தேடியது பின்பு அவள் அவனை பார்த்தாள் . இயல்பு நிலைக்கு திரும்பினாள் மாமா இது எந்த இடமுனு சொன்னீங்க? பாய்ண்ட் நீமோ பேட்டி. ம்ம் ஓகே மாமா என அவள் தூங்க ஆரம்பித்தாள். கடல் அலை அவர்களை தாளாட்ட இருவரும் தன் நிலை மறந்து தூங்கினார்கள்.
வானத்தின் ஒரு பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் காட்ச்சியளித்தது. இது சூரியன் பூப்பதற்கான அறிகுறி. ஹாஜிராவின் கண்கள் வழித்தன அவள் கண்களில் இருந்து நீர் கன்னத்தில் வடிந்தது. அவள் கைகள் வயிற்யை இறுக்கி பிடித்தன. அவள் எழுந்தாள் அசோக்கை எழுப்ப அவள் கை நீண்டன ஆனால் திடீரென்று தன் ஆடையின் பின்னால் பார்த்தாள். அடர் சிவப்பு இரத்தம் இருந்தது உடனே மௌனமாக அமர்ந்தாள் வலியில் கத்தவேண்டும் போல் இருந்தது ஆனால் அவளால் கத்த முடியவில்லை. தன் நிலை என்னவென்று அவளுக்கு தெரியும் ஆனால் அவள் அருகில் இருப்பது ஒரு ஆண். நேற்று இரவு வரை தன்னை பாதுகாத்து வந்தவன் இப்போது இல்லாமல் இருந்தால் நிம்மதி என்று தோன்றியது ஏனென்றால் அவன் ஒரு ஆண். அசோக் உடல் நெழித்தான் உடனே ஹாஜிரா தன் கண்களை துடைத்தாள். அவன் கண் முழித்தான் அவன் எதிரில் அதிக வெளிச்சம் அவன் கண்களை கூசின கண்களை மூடினான் மீண்டும் கண்களை மெதுவாக திறந்தான் எதிரே ஹாஜிரா அமர்ந்திருந்தாள் அவள் பின்னால் சூரியன் மலர்ந்து அவன் கண்ணை கூசின.
அவளை பார்த்து சிரித்தான் அவள் மௌனமாக இருந்தாள். அவள் உதடு துடித்தது அவன் அவளை உற்றுப் பார்த்தான். ஒரு இரவில் அவளுக்கு ஐந்தாறு வயது கூடியது போல் தெரிந்தது அவள் கண்களும் மூக்கும் உதடும் அவளை ஓவியமாக காட்டியது. அவன் கண்களில் நீர் வடிந்தது ஏனென்றால் அவள் முகம் அவன் தாயை நியாபகப் படுத்தின. அவள் சற்று தள்ளி அமர்ந்தாள் அவள் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் இரத்தக்கறை அவன் பதறிப்போய் எழும் முன்பே நிலைமையை புரிந்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அவன் படித்த அத்தனை புத்தகங்களிலும் அதை பற்றி சிறு குறிப்பு கூட இல்லை. அவளை பார்த்தான் அவள் மௌனமாக வலிகளை தாங்குவது அவனுக்கு புரிந்தது. பேட்டி குளிக்கிறியா? அவள் மெதுவாக தலையை ஆட்டினாள் அவன் பாதுகாப்பு டியூப்பை எடுத்து அவளிடம் குடுக்க அவள் தன் உடம்பில் மாட்டி கொண்டாள். அதன் கயிற்றை படகில் கட்டினான். அவள் தன் ஆடையின் கறை தெரியாதது போலவே கடலில் இறங்கினாள். அவளை இந்த நிலைமைக்கு மாற்றிய கடல் இப்போது அவளுக்கு ஆதரவாக இருந்தது. அவன் மௌனமாக இருந்தான் ஆனால் அவன் மனதுக்குள் பெரிய புயலே வீசியது. இந்த படகில் 2000 மைல் கடக்க முடியாது அதனால் கப்பல்கள் வரும் வரை இந்த தீவிலேயே இருக்கலாம். மனிதர்கள் இல்லாத இடம் மனிதர்களுக்கு பூமியே இல்லை. ஒரு சில நேரம் அது நரகம் பல நேரம் அது சொர்க்கம் அதனால் பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள இந்த சொர்க்கத்திலேயே வாழலாம் என முடிவு எடுத்தான். அவளிடம் கூறினான் அவளும் ஒத்துக் கொண்டாள் ஏனென்றால் அவளுக்கும் பூமியில் வேறு துணை இல்லை.
மரங்களில் பல பறவைகள் பல பழங்களை கொத்திக் கொண்டிருந்தன. ஹாஜிரா மண்ணின் மீது அமர்ந்திருந்தாள். அசோக் தீவின் நடுவில் உள்ள நல்லதண்ணி ஊற்றில் இருந்து நீரை பிடித்துக் கொண்டு கையில் பல பழங்களை கொண்டுவந்து அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி ஆசையாக கடித்தாள் ம்ம்ம் என்று அதன் சுவையில் கண்களை மூடினாள்.
**********************