நெல்லை பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்.இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் பணகுடி புறவழி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படியாக வந்த 4 இளைஞர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரனையில் பணகுடியை சேர்ந்த அரிகரன் (20), சஞ்சய் (19), முத்து குமார் (20), சபரிராஜன் (19) என தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.