தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில் அது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
சென்னை:
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 7 வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் மத்திய அரசு நேற்று முன்தினம் 4வது கட்ட தளர்வுகளை அறிவித்தது.அதில் மாநிலங்களுக்குள் உள்ளேயும்,இடையேயும் போக்குவரத்து தடை இல்லை.நோய் கட்டுப்பாட்டு பகுதியில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு தொடரும் எனவும்,செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்க அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து ,முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை புதிய தளர்வுகளை அறிவித்தார்.அதில் தமிழ் நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வணிக வளாகங்கள்,பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்,வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும்,வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும்.நோய் அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது.இவற்றை கண்டிப்பாக பின்பற்றுதல் அவசியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .