மீனம்பாக்கம் துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திவந்த ஆசாமியை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் மீட்பு விமானம் ஆனது நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் அதாவது மொத்தம் 119 நபர்களை சுங்கத்துறையினர் சோதனை இட்டனர்.
அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது மீது சந்தேகிக்கும்படி நடந்துகொண்டதால், அங்குள்ளவர்களுக்கு அவர்மீது ஒரு சிறிய அவநம்பிக்கை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை தனி அறைக்கு கிண்டு சென்று விசாரித்தனர். அவரது உள்ளாடைக்குள் மறைத்து 201 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு மொத்தம் 10 . 33 லட்சம் அதனால் அவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.