மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் குடியிருந்த அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதில் சிலருக்கு சிறு காயங்களும் சிலருக்கு படு காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடம் இடிந்து விழும்போது மணி அதிகாலை 6 என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். ஆதலால் மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் எட்டு பேரின் சடலங்களாக மீட்கப்பட்டனர், மேலும் இருபது நபர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை தரப்பட்டு வருகின்றது.
மேலும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்ததால் மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இன்னும் மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது. உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் அழுதுபுலம்பி கொண்டு இருக்கின்றனர். இறந்தவர்களில் ஆண், பெண் மற்றும் குழந்தை எத்தனைபேர் என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்படவில்லை.




