Tuesday, March 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

100 நாள் வேலை திட்டத்தின் தந்தை .. யார் இந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங்?

September 13, 2020
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட முன்னாள் ரகுவன்ஷ் பிரசாத் சிங்தான் மிக பிரபலமான 100 வேலை திட்டத்தை கொண்டு வந்தவர். கொரோனாவில் இருந்து குணமடைந்த இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். 1973ல் அரசியலுக்கு வந்த இவர், 40 ஆண்டுகளாக இந்திய அரசியலிலும், பீகார் மாநில அரசியலிலும் மிக முக்கியமான நபராக இருந்துள்ளார். அரசியல் கடந்து காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் உடன் இவர் நட்பாக இருந்துள்ளார்.

1946 ஜூன் 3ம் தேதி பிறந்த இவர் தன்னுடைய 74வது வயதில் காலமாகி உள்ளார். பீகாரின் வைஷாலி தொகுதியை தனது கோட்டையாக மாற்றிக்காட்டியவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக இவர் பதவி வகித்து இருக்கிறார். கட்சிக்குள் தன்னை ஓரங்கட்டுவதாக கூறி, சில நாட்களுக்கு முன் இவர் கட்சியில் இருந்து விலகினார்.

No Content Available

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதாவிற்கு கடிதம் அனுப்பிவிட்டு, கட்சியில் இருந்து இவர் வெளியேறினார். 1996-2014 வரை தொடர்ச்சியாக இவர் நாடாளுமன்ற எம்பியாக இருந்தார். மொத்தமாக ஐந்து முறை நாடாளுமன்றத்திற்கு இவர் வைஷாலி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இவர் மத்திய ஊரக அமைச்சரவை அமைச்சராக இருந்தார். இவர்தான் இந்தியாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்தார்.

அமெரிக்கா தொடங்கி சீனா வரை இந்தியா பொருளாதார சரிவை எப்படி சமாளித்தது என்று ஆச்சர்யப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் காரணமாக இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையை தடுக்க இவர் காரணமாக இருந்தார். இவர் எம்எல்ஏவாகவும், பீகார் லெஜிஸ்டேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் இருந்துள்ளார். அதோடு இவர் பிஎச்டி முடித்தவர். கணித பேராசிரியராக இருந்துள்ளார். கிராமப்புற மேம்பாட்டில் இவர் இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பர்ட்டாக இருந்துள்ளார் இவர்.

சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து குணமடைந்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்பும் இவர் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நீட் தேர்வு மையங்களில் தமிழ் புறக்கணிப்பு – இந்தி மற்றும் ஆங்கிலம் முன்னுரிமை..

Next Post

பிரதமர் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் ரேஷன் கார்ட் செல்லாது.. அதிரடி நடவடிக்கை

Next Post

பிரதமர் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களின் ரேஷன் கார்ட் செல்லாது.. அதிரடி நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version