அசாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுள்ளார்.

கொரனவை வென்ற 100 வயதான மூதாட்டி.
அசாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுள்ளார்.
கொரோன தொற்றுக்கு பெரும்பாலும் வயதானவர்கள் குழந்தைகள் தான் உயிரியந்து வருகின்றார்கள். மேலும் பி.பி., சுகர் போன்ற நோயுள்ளவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அனால் சில இடங்களில் வயதானவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் தற்போது அசாமை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து நலம் பெற்றுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மகேந்திர மோகன் சவுத்ரி மருத்துவமனையில், முதியோர் இல்லத்தில் வசித்து வரும் மாயி ஹாண்டிக்யூ என்ற 100 வயது மூதாட்டி, 10 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்டார்.
பின்பு அவர் கொரோனவில் இருந்து மீண்டு வந்து சாதனை படைத்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அவர், மருத்துவமனையில் இருந்த போது அவர் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உணவு சிறப்பாக இருந்தது. டாக்டர்களும், நர்ஸ்களும் தன்னை மிகவும் கனிவுடன் கவனித்துக் கொண்டனர் என கூறியுள்ளார்.
அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் எனக்கு, பெரும்பாலான நேரம் அசைவ உணவுகளையே வழங்கினார்கள். அவை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்




