கொரோனா நோயாளிகளை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக, கூடுதலாக 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இதுவரையில் மொத்தமாக, 4,22,085 கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பிற்கு உள்ளான அனைவருமே, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக, நோயாளிகளை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக, 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்பு ஆம்புலன்ஸ்க்குள் ஏறி, அதன் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார். இந்தப் புதிய வாகனங்களில், செயற்கை சுவாசக் கருவி உள்ளிட்ட, உயிர்காக்கும் பல்வேறு மருத்துவ சாதனங்கள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.