ராமநாதபுரத்தில் 11.5 கிலோ கஞ்சா பறிமுதல் 17 பேர் கைது செய்தனர்.
ராமநாதபுரம், நவ.30- ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைத்திருந்த 11.650 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கார்த்திக் உத்தரவிட்டார். இதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ராமநாதபுரம் கேணிக்கரை, நகர், புறநகர், பரமக்குடி நகர், எமனேஸ்வரம், நயினார்கோவில், கமுதி, கீழக்கரை, முதுகுளத்தூர் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, முத்துப்பாண்டி, சரவண பாண்டி சேதுராயர், ராஜ்குமார் சாமுவேல், ராஜா, ராணி, மோகன், சார்பு ஆய்வாளர் குமரேசன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த 11 கிலோ 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கடையில் கஞ்சா விற்ற 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 17 பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒரு பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.