தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் எழுதினர். இதில் வழக்கம் போல் 94.80% பெற்று மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 89.41 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது ஈரோடு மாவட்டம் 96.9 சதவீதம் தேர்சி பெற்று மாநிலத்தின் 2வது மாவட்டமாக விளங்குகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது. குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டம் 77.7 4 சதவீதம் பெற்று மாநிலத்தின் கடைசி இடத்தில் உள்ளது. மானியத்தில் அரசுப்பள்ளியில் 84.68 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆக உள்ளது.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2120. கொரோனா காரணமாக, நாட்டிலேயே முதன்முறையாக 9 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
dge.tn.nic.in, dge.tn.nic.in, examresults.net என்ற இணையதளத்தின் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.