தமிழகத்தில் உள்ள 47 சுங்கசாவடிகளில் 2016ம் ஆண்டு முதல் 21,165.87 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு மாநிலங்களவையில் தகவல்.

டெல்லி,
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்றும் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடப்ப் வரை எவ்வளவு தொகை தமிழகத்திலிருந்து சுங்கச்சாவடிகள் மூலமாக மத்திய அரசிற்கு கிடைத்திருக்கிறது என மாநிலங்களவையில் உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி,
கடந்த 2016-2017ம் ஆண்டில் தமிழகத்திலுள்ள 47 சுங்கச்சாவடிகளில் இருந்து 3320.48 கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2017-2018ம் ஆண்டில் 3894.20 கோடி ரூபாயும், 2018-2019ம் ஆண்டில் 3262.69 கோடியும், 2019-2020ம் ஆண்டில் 3392.25 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 2020-2021ம் ஆண்டில் 3875.02 கோடி ரூபாயும், 2021-2022ம் ஆண்டின் அக்டோபர் 31ம் தேதி வரை 3421.24 கோடி ரூபாய் என மொத்தமாக 2016- 2022 வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் 47 சுங்க சாவடிகளில் இருந்து மட்டும் 21,165.87 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சக நிதின் கட்காரி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.




