நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா உறுதியான 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியுள்ளது.