சென்னை பட்டாபிராம் பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா என்ற சொல்லுக்கும் அந்த பொருளுக்கும் இங்கு பலபேர் அடிமை. அவர்களின் போதை பழக்கத்தை சிலர் சாதுர்யமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இது போன்று போதை பொருளுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு அந்த பொருளை விற்பதற்கு என்றே சிலர் அதனை வாங்கி சேகரித்து வைத்து கொள்கின்றனர். இல்லை இல்லை சட்ட விரோதமாக பதுக்கி வைத்துக்கொள்கின்றனர்.
இந்த சட்ட விரோத செயல்கள் செய்யும் விஷ கிருமிகளை ஒழுப்பதென்று, சில காவல் துறையினர் காலை பகல் என்று பார்க்காமல் வேலை செய்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களையும், இடங்களையும் உடனடியாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பட்டாபிராம், தண்டுரை பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.