பாகிஸ்தானுடனான போர் 50 ஆண்டு முடிவு; பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போர் நினைவிடத்தில் மரியாதை.
டெல்லி,
1971ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய-பங்களாதேஷ் ( கிழக்கு பாகிஸ்தான் ) போர் தொடங்கியது; கடுமையான சண்டைக்கு பிறகு டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தானின் கிழக்கு படை இந்திய ராணுவத்திடம் நிபந்தனையற்று சரணடைந்த நிலையில் பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவாக இந்திய ராணுவம் – முக்தி பாஹினியின் கூட்டுப் படை வழிவகுத்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய மற்றும் பங்களாதேஷ் டிசம்பர் 16ம் தேதி வெற்றி விழாவை கொண்டாடி வருகிறது. அதன் வகையில் வெற்றி அடைந்து 51வது ஆண்டு துவத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆயுத படைகளின் மூன்று பிரிவுகளின் தலைவர்கள் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “விஜய் திவாஸ்” 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நினைவு தபால் தலையை வெளிட்டார்.
இந்தியாவை போன்று பங்களாதேஷ் இன்றைய தினத்தை சுதந்திரம் அடைந்த தினமாக கொண்டாடி வருகிறது; டாக்கா-வில் நடைபெறும் வரும் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.