காஞ்சிபுரம் முழுவதும் சுற்றி உள்ள 59 ஏரிகள் பலத்த மழையால் நிரம்பியது
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெல்ல கட்டுப்பட்டு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் பொது பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 181 வேர்கள் உள்ளன. இதில் காஞ்சப்புறம் பகுதியில் உள்ள 14 ஏரிகளும், ஸ்ரீ பெரம்பத்தூர் பகுதியில் 21 ஏரிகளும், படைப்பை பகுதிகளில் 19 ஏரிகளும், உத்திரமேரூர் பகுதிகளில் 5 ஏரிகளும் என மொத்தம் 59 ஏரிகள் நிரம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி இன்னும் இருக்கும் நூறு ஏரிகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் 135 ஏரிகளில் ௫௦
சதவீதமும், இன்னும் இருக்கும் 5 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்னும் மழை பொழிய வாய்ப்புள்ளது. ஆதலால் மீதம் இருக்கும் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்க படுகிறது.
மேலும் நிவர் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அதிவிரைவாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே நிரம்பியுள்ள ஏரிகளை கண்காணிக்க 50 கண்கானிய்ப்பு குழுக்கள் நியமனம் செய்துள்ளது அரசு. மழை வெள்ளத்திலும், ஏரிகளின் நீர் வரத்தினாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க குழுக்கள் நியமனம்.