Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இந்தியாவில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் பலி!!

December 17, 2021


தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் உயிரிழப்பு – மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்.

டெல்லி,
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி யானைகள் அதிகம் உயிரிழந்துள்ளதா ? என்றும் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய வனத்துறை அமைச்சர்,
மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து யானைகள் உயிரிழப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும்; குறிப்பாக யானைகளின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில், நீர் ஆதாரங்களை அதிகரித்தல், தீவன மரங்களை நடுதல் மற்றும் மூங்கில் காடுகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மாநில வனத்துறைகளுடன் இணைந்து செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் படுகாயமடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை

2009-2019ம் ஆண்டு வரை நாட்டில் தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் 600 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 117 யானைகளும், கர்நாடகா மாநிலத்தில் 116 யானைகளும், அசாம் மாநிலத்தில் 105 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் 70 யானைகள் மின்சாரம் தாக்கி மட்டும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுவாரியாக உள்ள பட்டியலில்,

  1. 2009-2010 – 11
  2. 2010-2011 – 04
    3.2011-2012 – 02
  3. 2012-2013 – 02
  4. 2013-2014 – 06
  5. 2014-2015 – 09
  6. 2015-2016 – 08
  7. 2016-2017 – 07
  8. 2017-2018 – 11
    10.2018-2019 – 10
    என மொத்தம் 70 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

காடுகளை வளப்படுத்தும் யானைகள் உயிரிழப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில் தனி மனித பாதுகாப்பு மற்றும் தனிநபர் உடைய நில பாதுகாப்பிற்காக மின்சார வேலிகள் அமைக்கப் படுவதனால் அதில் சிக்கி யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

10 ஆண்டுகள் சிறை…கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா டிச.20 ஆம் தேதி தாக்கல்!

Next Post

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி!

Next Post

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version