பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சந்தைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. முதுரவாயில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் இதனை கண்காணித்து வந்து இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரவாயலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் இருந்த லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு பார்சல் இறக்கிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் சந்தேகிக்கும் படி இருந்ததால் போலீசார் அருகில் சென்று விசாரித்து இருக்கின்றனர். அப்போது அவர்கள் நம்பகத்தனமாய் இல்லாத பதிகளை அளித்துள்ளனர். அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த சிலம்பரசன் , ராயபுரத்தை சேர்ந்த சரவணன், தர்மபுரியை சேர்ந்த சக்திவேல் இந்த காட்டியதை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்காவை பெரிய பார்சல்களாக எடுத்து வந்து இரவு நேரங்களில் செல்போன், வாட்ஸ் ஆப் மூலம் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி குட்கா கொண்டுவரப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.