மங்களூருவில், ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை படைத்து உள்ளார். அவரது இந்த சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த உலகம் சாதனைகளும் அதனை படைக்கும் திறன் படைத்தவர்களாலும் ஆனது. அப்படி இருக்க இங்கு இருக்கும் ஓவருவருக்கும் ஒரு ஒரு திறமை உண்டு. இப்படி மங்களூருவை சேர்ந்த 17 வயது மாணவி இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் திறமை உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் கோபட்கர். இவரது மனைவி சுமா பட்கர். இந்த தம்பதியின் மகள் ஆதிஸ்ரூபா(வயது 17). கோபட்கர் மங்களூருவில் ஒரு கல்வி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அந்த பயிற்சி மையத்தில் ஒரு பயிற்சி தன் ஈன்றது கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் பயிற்சி. அவருடையா மகளும் அந்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வந்தார். தற்போது 2 கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதி வருகிறார். அதாவது வலது கையில் எழுதும் வார்த்தையை, இடது கையையும் பயன்படுத்தி எழுதி வருகிறார்.
உலக சாதனையில் கலந்து கொண்ட ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார். இதனை பார்த்த ஆச்சரியம் அடைந்த உத்தர பிரதேச கல்வி நிறுவனத்தினர், ஆதிஸ்ரூபாவை வெகுவாக பாராட்டி அவருக்கு விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25 வார்த்தைகள் எழுதியதே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது.
இதுபற்றி அறிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு வந்து, ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது. அதில் அவர் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கடவுள் எனக்கு 10 விரல்கள் கொடுத்து உள்ளார். அந்த விரல்களை வைத்து நான் இன்னும் நிறைய சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளேன். இரு கைகளை பயன்படுத்தி இன்னும் வேகமாக எழுத திட்டமிட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.