நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் குஷ்புக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை, தயாரிப்பாளர் மற்றும் பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அவர், திடீரென ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர், ‘நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை சமீபத்தில் பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான் அதிர்ஷ்டவசமாக அப்பல்லோ மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்று வருகிறேன். உங்கள் உடல் சோர்வாக இருந்தால் தயவு செய்து அதன் அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.