கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலாமானார்.
மகாகவி காளிதாஸா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தவர் சரோஜா தேவி. 50 ஆண்டுகளாக திரைத்துறையில் இயங்கி வரும் சரோஜாதேவி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அபிநய சரஸ்வதி என்றும் கன்னடத்துப் பைங்கிளி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். திரையில் தனக்கென தனிப்பாணியை வகுத்து அதில் நடித்து முத்திரை பதித்தவர் சரோஜாதேவி. 87 வயதான இவர், வயதுமூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள கொலம்பியா மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார். அன்றைய நடிகையரில் அதிக சம்பளம் வாங்கிய நாயகி என்ற் பெருமை கொண்ட சரோஜாதேவி எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும, சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார்.





