உலகையே புரட்டி போட்டுகொண்டு இருக்கும் கொரோனா என்னும் கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்தியாவும் தடுப்பூசி கண்டு பிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாட்டில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தனக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது “ட்விட்டர் “பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.