அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடம்.
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிவிடி தினகரனின் விசுவாசியும் , முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுக பொருளாளருமான வெற்றிவேல் சமீபத்தில் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.
அப்போது அவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெற்றிவேல் கடந்த 6 ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். அதே சமயம் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.