அண்ணாத்த படத்தின் மூன்றாவது பாடலான ‘மருதாணி’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
தீபாவளி ரிலீசாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் அது தொடர்பான அப்டேட்களை அடுத்தடுத்து இறக்கி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மீனாவும் குஷ்புவும் ரஜினிகாந்த் உடன் நடனமாடும் அட்டகாச புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ரசிகர்களை 90களுக்கு கொண்டு சென்றுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கனவே அண்ணாத்த டைட்டில் சாங், நயன்தாராவுடன் ரஜினி நடனமாடும் சார சாரக் காத்து உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்த நிலையில், சமீபத்தில் வெளியான அண்ணாத்த டீசரில் ரஜினிகாந்தின் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தின.
திருமண வைபவத்தில் மெஹந்திக்கு என்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறிக்கும் வகையில் இந்த மருதாணி பாடல் உருவாகி உள்ளதா? என ரசிகர்கள் நேரடியாக இசையமைப்பாளர் இமானுக்கே ட்வீட் செய்து கேட்டு வருகின்றனர். நிச்சயம் இந்த பாடல் குடும்பங்கள் கொண்டாடும் பாடலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குஷ்பு மற்றும் மீனா இருபுறமும் ஆடி நிற்க நடுநாயகமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடனம் ஆடும் புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது. குஷ்பு மீனாவுடன் ஜோடி போட்டு ரஜினிகாந்த் ஆடி பாடியதை எல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு என ஃபீல் பண்ணிய ரசிகர்களுக்கு இந்த பாடல் பெரிய ட்ரீட்டாக அமையும் என்பது நிச்சயம்
இந்த தீபாவளி ஒட்டுமொத்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் செம பரிசு காத்திருக்கிறது திரையரங்குகளில் என்பதை ஒவ்வொரு அப்டேட்டிலும் நிரூபித்து வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா.




