மத்திய இஸ்ரேலியப் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்ட இளைஞர்கள் 1100 ஆண்டுகளாக மண் ஜாடியில் புதைத்து வைத்திருந்த 425 தங்க காசுகளைக் கண்டெடுத்துள்ளனர்.
கலிப்பா பகுதியில் கிடைத்த 845கி எடை கொண்ட அக்காசுகள் அக்காலத்தில் பெரிய மாளிகை கட்டும் அளவு மதிப்புடையதாக இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதை புதைத்து வைத்து யார் என்பதும், அதை எடுக்க ஏன் வரவில்லை என்பதும் மர்மமாகவே உள்ளது.
யார் வைத்தார்களோ அவர்கள் அதை மீண்டும் எடுக்கும் நோக்கோடு வைத்திருக்க வேண்டும். ஜாடி அசையாதவாறு ஆணி அடித்து வைத்திருப்பதாக ஆராய்ச்சி இயக்குனர்கள் லியட் நாடவ்வ் – ஜிவ் மற்றும் எல்லி ஹத்தாத் (Liat Nadav-Ziv and Elie Haddad) தெரிவிக்கிறார்கள்.
புதையல் கண்டெடுத்த இளைஞர் ஒஸ் கோஹன் ( Oz Cohen) கூறுவதாவது: “நான் முதலில் பார்த்தபோது சிறிய இலைகள் போல் காட்சியளித்தன , பிறகே அவை தங்கக்காசுகள் என்று தெரியவந்தது”
நிபுணர் ராபர்ட் கூல் (Robert Kool) இதைப்பற்றி பேசும்போது தினார்களுடன் 270 சில்லறை காசுகளும் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். அவற்றில் ஒன்று ப்யசான்டினே (Byzantine) பேரரசர் தேசாபிளாஸ் (Theophilos ) கான்ஸ்டான்டிநோபிளில் செய்ததாகவும், அவ்விரு அரசுகளின் போட்டிக்கான அரிய ஆதாரமாக இதைக் கருதலாம் எனவும் அவர் விளக்கம் அளிக்கிறார்