பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி இன்ஜினியர், ப்ராஜெக்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தப் பணியிடங்கள் :150
கல்வித்தகுதி: பிஇ,பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு :28-32 (வயதானது 01.08.2022ம் தேதியின்படி கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம்: இது ஒப்பந்தப் பணி என்பதால் டிரெய்னி பணியிடத்திற்கு முதல் வருடம் ₹30,000மும், இரண்டாம் வருடம் ₹35,000மும், மூன்றாம் வருடம் ₹40,000மும், ஊதியமாக வழங்கப்படும்.
இன்ஜினியர் பணியிடத்திற்கு முதல் வருடம் ₹45,000மும், இரண்டாவது வருடம் ₹50,000மும், மூன்றாவது வருடம் ₹55,000மும் ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்டு 3ம் தேதிக்குள் https://www.bel-india.in/ சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ப்ராஜெக்ட் இன் ஜினியர் பணிக்கு ₹472
ட்ரெய்னி பணிக்கு ₹172 செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf




