கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் நடக்கிற அற்புதத்தை நீங்களே பார்ப்பீங்க. கொய்யா மரத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கொய்யா இலை டீயில் உள்ள மருத்துவ குணங்கள் ;
- கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவை குணமாகும்.
- இலையை டீ போல் செய்து குடித்து வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்குகிறது. மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது.
- இதில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகின்றது.
- இந்த இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தரும்.
- கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்தும்.
- 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
- வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, தொடர்ந்து குடித்து வந்தால், நீரிழிவு நோயை குணமாக்கும்.
- எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும்.