பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஆரியை நாமினேட் செய்ய முடியவில்லை என பாலா கடுப்பாகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நேற்று அனிதாவின் எவிக்ஷனுக்கு பிறகு போட்டியாளர்களில் ஒருவர் குறைந்து எண்ணிக்கை 8 ஆகியிருக்கிறது.
இப்போது முதல் புரோமோவில் நாமினேஷன் விஷயம்தான் ஹைலைட் ஆகியிருக்கிறது. இந்த வாரம் வீட்டின் தலைவர் ஆரி என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. இதனை பிக்பாஸ் சொல்ல, ‘ச்சா…12 வாரமா அவரை வச்சுதானே ஓட்டிட்டு இருந்தேன். இப்போ வேற ஆப்ஷன் யோசிக்கனுமா?’ என பாலாஜி கேட்கிறார்.
READ MORE- ’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக். விஜய்சேதுபதி ரோலில் யார்?
முதலில் வரும் ரம்யா, ‘ஆஜீத் மற்றும் கேபியை போட்டியிடும் தன்மை குறைவாக இருக்கிறது’ என சொல்லி அவரை நாமினேட் செய்கிறார். அடுத்து வரும் ரியோ, ரம்யா என் எதிர்க்கட்சி எனவே அவரை நாமினேட் செய்கிறேன் என்கிறார்.
அடுத்து கேபி, ஆஜீத் மற்றும் ஷிவானியை நாமினேட் செய்து, ‘முதல் முறையா ஆஜீத்தை நாமினேட் செய்யறேன். அவங்க ரெண்டு பேரும் என்ன யோசிக்கறாங்க அப்படிங்கறது இதுவரைக்குமே தெரியல’ என்கிறார். சோம், ஆஜீத் மற்றும் ஷிவானியின் பெயரை சொல்ல, ஷிவானி ஆஜீத் மற்றும் கேபியை நாமினேட் செய்வதோடு புரோமோ முடிகிறது.




