பிக்பாஸ் வீட்டின் 23ஆம் நாளின் முதல் ப்ரோமோவில் அனிதா சம்பத் கதறி அழுவது போல் காட்டப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நேற்றைய நாள் ஒளிபரப்பில் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக நான்கு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.
பொதுவாகவே ஒரு கொண்டாட்டத்திலும் ஆங்காங்கே சில மனக்கசப்புகளும் இருக்கும், அது போல இயல்பாகவே இந்த கொண்டாட்டத்திலும் இருந்தது.
ஆனால் இன்றைய முதல் ப்ரோமோவில் பிரபல செய்தி தொகுப்பாளர் அனிதா சம்பத் கதறி அழுவது போல் காண்பிக்கப்பட்டுள்ளது.
அனிதா சம்பத் பிக்பாஸிடம் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றும் யாரையும் நம்ப முடியவில்லை என்றும் சொல்லி அழுகிறார்.
அனிதா சம்பத் பொதுவாகவே சட்டென உணர்ச்சிவசப்படும் குணாதிசயம் கொண்டவராகவே இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தருவதாகவே உள்ளது.
அவரை இதற்கு முன் வரை தைரியமான பெண்ணாக பார்த்தவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏனெனில் இவர் இந்த 23 நாட்களில் அழாமல் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அழுகை என்பது அபத்தமான காரியம் இல்லை உணர்வுகளின் வெளிப்பாடு என்றாலும், எந்த உணர்வுகளையும் அளவோடு வெளிப்படுத்தினால் தான் அதற்கும் மரியாதை உண்டு.