ஜப்பானின் ஒகினாவா எனும் மாகாணத்தில் நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறத்தில் ஓடியது. இதை கண்ட உள்ளூர் மக்கள் அச்சமடைந்தனர். அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பில் உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயமானது கசிந்ததால் நதியின் நிறமானது மாறியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் இதுகுறித்து பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் மன்னிப்பும் கேட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.