பட்டாசு வழக்கில் இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க மற்றும் தயாரிக்க விற்பனை செய்ய தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, தற்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தளர்வுகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இடைக்கால உத்தரவு நிச்சயம் பிறப்பிக்கப்படும் என கூறி தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். பசுமை பட்டாசுகள் என்பது தயாரிக்கப்படவில்லை பட்டாசு தயாரிப்பவர்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறீர்கள் நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராகவும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வில்லை மாறாக கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதனால்தான் பட்டாசுக்கு தடை விதிக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் எத்தகைய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.