மகள்களுடன் புகைப்படங்களை பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகளை எடுத்துரைக்கவும், அவர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இத்தினம் கொண்டுவரப்பட்டதாகும். பல்வேறு பிரபலங்களும் தங்கள் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் :
ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் இருவருக்கும் அன்பு, கவனிப்பு மற்றும் வாய்ப்புகள் எல்லா நேரங்களிலும் சமமாக இருக்க வேண்டும்.
சமீரா ரெட்டி, திரைப்பட நடிகை :
எனது மகளிடம், ‘நீ சமமானவள், திறமையானவள்’ என எப்போதுமே அவளை ஊக்கப்படுத்துகிறேன். பெண்களை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் என் மகனுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்.
பெமா காண்டு, அருணாச்சலப் பிரதேச முதல்வர் :
எனது மகள்கள்; எனது பெருமை!
பிரமோத் சாவந்த், கோவா முதல்வர் :
ஒவ்வொரு பெண் குழந்தையும் புதிய இந்தியாவின் ஒளிவிளக்கு. பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சமமான சமுதாயத்திற்கான அடித்தளத்தை உறுதிபடுத்துவோம்.
பிரியங்கா சதுர்வேதி, ராஜ்யசபா எம்பி :
ஒரு மகள் இருப்பது ஒரு ஆசீர்வாதம். செல்ஃபி பாட்னர், சிறந்த தோழி, என் கஷ்டங்களை குணப்படுத்துபவர், எனது மகிழ்ச்சியின் ஆதாரம்.
ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் :
மகள்கள் சிறப்பு மகிழ்ச்சி, ஒரு தனித்துவமான பிணைப்பு. அவர்களின் சாதனைகள் எப்போதும் நம்மை பெருமைப்படுத்துகின்றன.