இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் இன்று சமூக வலைத்தளத்தில் தங்கள் முதல் குழந்தையின் வரவை பற்றி அறிவித்திருந்தார்கள்.
நட்சத்திரங்கள் ஊரடங்கு காலத்திலும் தங்கள் ரசிகர்களுடன் சமூகவலைத்தளம் மூலமாக தொடர்பில் இருந்து அவர்களை மகிழ்வித்து வருகின்றனர். தங்களின் உடற்பயிற்சி, சமையல் வீடியோக்கள், புதுப்பட ஒப்பந்தங்கள், நிச்சயதார்த்தம் முதல் திருமணம் குழந்தை பிறப்பு வரை தங்கள் வாழ்க்கையை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த வரிசையில் இன்று இணைந்திருப்பது விராட்கோலி அனுஷ்காஷர்மா ஜோடி. கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்த இந்த காதல் ஜோடி வரும் ஜனவரியில் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
இந்த வரிசையில் மற்றொரு கிரிக்கெட் வீரரான ஹார்டிக்பாண்டியாவும் முன்னரே இணைந்துவிட்டார்.ஹர்டிக்பாண்டியா நடாசா ஸ்டான்கோவிக் தம்பதிக்கு கடந்த ஜூலை 30 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி தம்பதியருக்கு கடந்த ஏப்ரல் 16 ல் அழகான பெண்குழந்தை பிறந்தது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை பேர்ல் மானேவுக்கும் சக போட்டியாளரான டிவி நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த்க்கும் இடையே காதல் மலர்ந்தது.
பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல் நிலைக்காது அனைவரும் நம்பப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக பேர்ல் மானே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடக்கும்.
காதலில் விழுந்தேன் பட நாயகன் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருபீக்கும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி பெண்குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர்.
சின்னத்திரையின் ராஜா ராணியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆலியா மானசா சஞ்சீவ் கார்த்திக் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டிருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்களை கொண்ட இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பெண்குழந்தை பிறந்தது, குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டியுள்ளனர்.
தன்னுடைய எதார்த்த பேச்சினால் பல ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகருமான ரியோ ராஜ், சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கும் இந்த வருடத்தில் புதுவரவாக தேவதை போன்ற பெண் குழந்தை பிறந்தது.