சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னையில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், நோய் பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்த கொரோனா பாதிப்பு டிசம்பர் 4-வது வாரத்தில் 1,720ஆக அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.