தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்தது மீண்டும் இப்போது வெயில் வாடி எடுக்கின்றது. மீண்டும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மற்றும் சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்ய கூடும் என எதிர்ப்பாக படுகிறது.
அதே போல சென்னை பகுதிகளில் காண மழைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மேலும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெரிய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




