பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவது மட்டும் வளர்ப்பு ஆகிவிடாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழும் முறை நன்றாக அமைய ஒரு சில விஷயங்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவற்றில் சில இதோ
- தவறு செய்தல் இயல்பு தான். அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
- கூடவே, பெற்றோர் செய்யும் தவறை ஒப்புக்கொள்வதும் அதே அளவு முக்கியம்
- தவறை முன் வந்து ஒப்புக்கொள்ளுதல் நல்லது.
- அதை பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்தே சரி செய்யலாம்
- மற்றவர் விரும்பும் வகையில் இருப்பதை விட, உன் விருப்பப்படி வாழலாம்
- எல்லாரிடமும் ஒரே அளவு அன்பாய் இருக்க வேண்டும் என்பது விதிமுறை அல்ல.
- ஒரு சிலரைப் பிடிக்கவில்லை என்றாலும், அது தவறல்ல
- வளரும்போது, சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை, வாழ்க்கை இருக்கிறது என்று புரிந்து கொள்வது முக்கியம். பல சண்டைகளைத் தவிர்க்கலாம்
- உன் கருத்துகளை எப்போதும் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். நிதானத்துடன், யாரையும் புண்படுத்தாத கருத்துகள் மற்றும் விவாதங்களை எப்போதும் தெரிவிக்கலாம்
- இந்த பக்குவம் எல்லா இடங்களிலும் நேரங்களிலும் பயனளிக்கும்
- நீ அவ்வப்போது கவலையாக உணரலாம். பரவாயில்லை. எப்போதுமே சிரித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை
- ஒரு வயது வந்தவுடன், உடலியல் பற்றி பேசுவது மிக முக்கியம். ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ, உடல் அமைப்பு, ஆண்கள் உடலுக்கும் பெண்கள் உடலுக்கும் பாகுபாடு, உடலுறவு விவரங்கள், ஆரோக்கியம் அனைத்துமே நல்ல முறையில் சொல்ல வேண்டும்
- சண்டையிலிருந்து விலகுவது முதல் படியாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் இது கோழைத்தனம் இல்லை
- ஒரு பிரச்சனை, உதவி என்றால் பெற்றோரை அணுகலாம். அதை மூடி மறைத்து பெரிதாக்காமல் முதலே தொடர்பு கொள்ளலாம்
- பெற்றோரும் அவர்களைக் கண்டிக்காமல் நிதானமான முறையில் செயல்பட்டு, அன்பாக திருத்தலாம்
- பிள்ளைகளின் ஆர்வம் நிறைந்த விஷயங்களில் அவர்களை மேலும் ஈடுபடுத்துங்கள். அவர்கள் பேச்சைக் கவனியுங்கள்
- நல்ல நண்பர்களையே தேர்வு செய்ய வேண்டும்
- நீங்கள் உங்கள் சிறு வயதில் நேர்ந்த சம்பவங்களைப் பகிரலாம்
- வளர்ந்து பணக்காரர் ஆவது வாழ்க்கையின் இலக்கு அல்ல
- வளர்ந்து சந்தோஷமாக வாழ்த்வதே வாழ்க்கையின் இலக்கு
- நீ சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உன்னைப் பிடிக்கவேண்டும் என்பது அவசியமல்ல
- உன் கருத்த்துகளை எப்போதும் நான் மதிக்கிறேன்
- உன் கருத்து சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எனினும் எப்போதும் உன் எல்லா கருத்துகளையும் காது கொடுத்து கேட்பேன்
- முடிந்தவரை மற்றவருக்கு உதவி செய்
- நீ என் பிள்ளையாய்ப் பிறந்ததில் எனக்கு பெருமை
- நீ எப்போதும் என் அன்பிற்குப் பாத்திரமாக இருப்பாய்