எரிசக்தி, சுகாதாரம், காப்பீடு வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய முன் வருமாறு இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா – இந்தியா வர்த்தக கவுன்சில் சார்பில் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மோடி, காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித முதலீடுகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் முதலீடுகள் செய்ய நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்திய வேளாண்மைச் சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பாதுகாப்பு, காப்பீடு, விண்வெளி, விமானத் துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நகரங்களை விட, கிராமங்களில் இணையப்பாடு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட மோடி தொழில் முதலீடு வாய்ப்புகள் நிறைந்த நாடாக விளங்கும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.